இது என்ன புதுசா இருக்கு… கோவையில் பாகுபலி கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்அவுட்..!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது.

அதில் அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது செல்லும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் “தமிழக மக்களின் பாகுபலியே!! கழகப் பொதுச் செயலாளரே!!!
தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்” என்ற வாசகங்களுடன் கட் அவுட்டை வைத்துள்ளனர்.

பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர்.

அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளது.