என்னது… பெண்களுக்கு பேருந்துகளிலும் இலவச பயணம் இல்லையா..? அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்‍கம்.!!

சென்னை: தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் வழங்க முடியாது என போக்‍குவரத்துறை ​அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.

உறுப்பினர் எழுப்பிய கேள்விக்‍கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். போக்‍குவரத்து கழகம் ஏற்கனவே 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணிக்‍க அனுமதிக்க இயலவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.