லண்டன்: லண்டன்: இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். இதனால் இந்தியா சண்டையை விட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கெஞ்சினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கத்தார், சவுதி அரேபியாவை தொடர்ந்து அவர் பிரிட்டன் சென்றுள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட மக்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்தியா – பாகிஸ்தான் உறவு பற்றி பேசினார். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே விருப்பம். இந்தியா இறங்கி வர வேண்டும் என்று கூறினார்.
இதுதொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: ”இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும். ஆனால், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது.
காஷ்மீர் மக்களின் ரத்தம் வீணாக போகக்கூடாது. நாங்கள், 4 போர்களை நடத்தியுள்ளோம். அதற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் செலவாகி உள்ளது. அந்த நிதி பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். நாம் அமைதியாக வாழ விரும்புகிறோமா? அல்லது தொடர்ந்து போராட விரும்புகிறோமா? என்பது நம்மை பொறுத்தது தான். நாம் ஒருவரையொருவர் நேசித்து மதித்து மரியாதையுடன் வாழ்வதே எங்கள் விருப்பம். ஆனால் இந்தியா சண்டையிடும் போக்கை கடைப்பிடிக்கிறது. இதனால் இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவும் முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
நம் நாட்டை எடுத்து கொண்டால் பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அதன்பிறகு காஷ்மீர் விவகாரம் பற்றி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானை தாக்கிய பிறகும் கூட நம் நாடு அதனை உறுதி செய்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடன் இருந்த சிறிய வகையிலான உறவையும் நம் நாடு முற்றிலுமாக துண்டித்தது. அதோடு 4 நாள் போரில் நம் நாட்டிடம் பாகிஸ்தான் சம்மட்டி அடி வாங்கியது. உயிர் பயத்தில் நம்மிடம் கெஞ்சி போரை நிறுத்திய பாகிஸ்தான் அதன்பிறகும் அடங்கவில்லை. சிந்து நதி நீரை திறக்காவிட்டால் அணுஆயுதம், ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வாய்ச்சவடால் செய்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்போ பேச்சுவார்த்தைக்கு இந்தியா வர வேண்டும் என்று மேடைக்கு மேடை கூறுகிறாரோ தவிர அவர் தரப்பில் அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இல்லை . மாறாக ராணுவ தளபதி அசீம் முனீர், சொந்த கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை வைத்து மட்டுமே நம் நாட்டை சீண்டி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.







