ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை முடித்து கோவைக்கு திரும்பியுள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
யோகாவின் சக்தியை மெய்ப்பிக்கவே மோட்டார் சைக்கிளில் கைலாயம் வரை சென்றேன்
மருத்துவர்கள் முடியாது என சொன்னதை நான் செய்து காட்டியிருக்கிறேன். அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சக்தியான நாடு என நிரூபிக்க வேண்டும். சினிமாவிற்கு தமிழக அரசியலுக்கும் தொடர்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. எம் ஜி ஆர், ஜெயலலிதா போல் விஜயும் வந்துள்ளார் என கூறியுள்ளார்.