கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது.
இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா? எனவும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரூர் துயரத்த்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். உயிரிழந்த 41 குடும்பத்தினருடைய கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் ஏற்க உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களை பாதுகாப்பது எங்களின் கடமை, அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக விஜய் இருப்பார்” என்றும் தெரிவித்துள்ளார்.