குடியரசு துணைத் தலைவர் தேர்தல் :பாஜக வேட்பாளர் யாருனு தெரியணுமா..? வெயிட் அண்ட் சிசீ..!!

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆகையால், அதற்கு முன்பாக புதிய துணை குடியரசுத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும்.

சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம், துணை குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 5 தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19 ஆகும். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நடத்தப்பட்டால் அதன் எண்ணிக்கையும் ஆகஸ்ட்6-ஆம் தேதி மாலை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் இன்று மாலை பாஜக கூட்டணி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.