கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (புதன் கிழமை)மாலை 5 மணிக்கு ராணுவ விமான மூலம்கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.. பின்னர் காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார் .இன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். நாளை (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி..என் . ரோடு, கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி. .ராதாகிருஷ்ணன் மதியம் 2 மணிக்கு காரில் புறப்பட்டு கோவை விமான நிலையம் எதிரே அவிநாசி ரோட்டில் உள்ள கே. .எம். சி . எச். மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு கொடிசியா அரங்கத்திற்கு வருகிறார். அங்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன் விழாவில் பங்கேற்கிறார் .அதை முடித்துக்கொண்டு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டிகோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் கோவை விமானநிலையம்,மற்றும் துணை ஜனாதிபதி பங்கேற்கும்நிகழ்ச்சிகளிலும், வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் பயணிகளின் உடைமைகள், கார்கள் மற்றும் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பவன் குமார் கூறியதாவது:-ஜனாதிபதி வருகையையொட்டி பீளமேடு, கே. எம் .சி. எச் மருத்துவமனை, சின்னியம்பாளையம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, இருகூர் ,ஏஜி புதூர், கொடிசியா வளாகம் ,சித்ரா ,நேரு நகர் ,காளப்பட்டி ஹோப் காலேஜ் நீலாம்பூர், ரேஸ்கோர்ஸ் நவஇந்தியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பகுதிகளில் இன்று (புதன்) காலை 8:00 மணி முதல் நாளை (வியாழன்) இரவு 10 மணி வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன்.!!









