ஆயுதங்கள் வாங்க உக்ரைனுக்கு மேலும் ரூ.1,500 கோடி நிதி கொடுத்த அமெரிக்கா.!!

வாஷிங்டன்: ஆயுதங்களை வாங்குவதற்காக உக்ரைன் நாட்டிற்கு மேலும் ரூ.1,500 கோடி நிதியளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

உக்ரைன் நாடு ராணுவரீதியில் வலிமை அடைய அமெரிக்கா கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து உதவியளித்து வருகிறது.

அமெரிக்கா அளிக்கும் நிதியை கொண்டு போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை உக்ரைன் வாங்கி குவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு 4-ஆம் கட்ட உதவியாக ரூ.1,500 கோடி வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதை கொண்டு உக்ரைன் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 4 கட்டங்களாக ரூ.9,000 உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் படையினர் சமாளிப்பதற்கு அமெரிக்கா அளித்த நிதியுதவி முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.