கோவை ரெயில் நிலையம் யார்டு அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை
சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் தண்டவாளத்தை கடந்த போது
ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply