கோவை 16 கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொக்கனூர், முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவரது மகன் அரவிந்த் (வயது 22) கடந்த மாதம் இவரின தந்தை செந்தில் குமார் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதிலிருந்து அரவிந்த் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தாயாரின் சேலையை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவர் தாயார் மகாலட்சுமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சகாதேவன்சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தந்தை இறந்த தூக்கம் தாங்காமல் மகன் தூக்கு போட்டு தற்கொலை .
