மூதாட்டிக்கு மசாஜ் செய்வது போல் நடித்து 8 பவுன் நகை திருட்டு. இளம்பெண் கைது…

கோவை மாவட்டம் காரமடை அய்யப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 80) இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே ஜெயகொடி தண்ணீர் கொடுத்தார் அதை குடித்துவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு மசாஜ் செய்ய தெரியும். .உங்களுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி எல்லாம் போய்விடும் என்று கூறினார். இதற்கு ஜெயகொடி சம்மதித்தார். பின்னர் மசாஜ் செய்யும்பொது கழுத்தில் செயின் கிடக்கக் கூடாது. அதை கழட்டி வையுங்கள் என்று கூறினார்உதட்டியும் அவர் அணிந்திருந்த 8 பவுன் செயினை கழட்டி வைத்தார்..மசாஜ் செய்து முடித்ததும் குளித்துவிட்டு வாருங்கள் என்று அந்த பெண் கூறினார். மூதாட்டி குளிக்க சென்றார் .அப்போது அந்த இளம்பெண் 8 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார் . இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த இளம் பெண்ணை தேடினர்.பின்னர் காரமடை பஸ்நிலையம் அருகே வைத்து அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்அங்குள்ள திம்மம்பாளையத்தை சேர்ந்த தமிழ் யாழினி என்ற சூர்யா (வயது 32 )என்பது தெரியவந்தது.இவர் அந்த நகையை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து அதற்கு மாறாக வேறு தங்க நகைகள் வாங்கியதும் தெரிய வந்தது. இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது. இவர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.