கோவை மே 7
கோவை அருகே உள்ள இருகூர் பைபாஸ் ரோட்டில் கோவை “ஹார்ட் பவுண்டேஷன்”மருத்துவமனையின்புதிய கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது.இங்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ காப்பர் வயர்களை 2 பேர் திருடினார்கள். அவர்களைகாவலாளிகள் கையும் களவுமாக பிடித்துசிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டி பக்கம் உள்ள காரம் பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 36 )கோவை, ராமநாதபுரம் அம்மன்குளம் ,ஏரி மேட்டை சேர்ந்த தங்க குமார் (வயது 46) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 10 கிலோமீட்கப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.