பொது இடத்தில் பழைய எலக்ட்ரிக் வயரை எரித்த 2 பேர் கைது.

கோவை மே 16 கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று அங்குள்ள ஆசாத் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பொது இடத்தில் பழைய எலக்ட்ரிக் வயர்களை போட்டு இருவர் தீவைத்து எரித்து கொண்டிருந்தனர்.இதனால் அந்த பகுதி மாசுபட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை யடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் ஆசாத் நகரை சேர்ந்த கார்த்தி (வயது 35 )அயூப் (வயது 35)என்பது தெரிய வந்தது. 40 கிலோ பழைய வயர்கள்பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.