நீலகிரி மாவட்டம் முழுவதிலும் தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

உதகை ஜூன் 25நீலகிரி மாவட்டம் முழுவதிலும்தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில்படி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் மேற்பார்வையில் நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் உதகை நகர இளைஞரணி சார்பாக தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றி கழக நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, உதகை நகர அமைப்பாளர் சேகர், குன்னூர் நகர அமைப்பாளர் பிரசாந்த், கோத்தகிரி ஒன்றிய அமைப்பாளர் பிரதீப், கோத்தகிரி நகர அமைப்பாளர் சரவணா ஆகியோரும் இணைந்து நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடினர், தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் 51 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடும் வகையில் நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் உதகை நகர இளைஞர் அணி சார்பாக 35 வது வார்டு மேல் காந்தி நகர் பகுதியில் கேக் வெட்டியும் இனிப்புகள் பகுதி பொதுமக்களுக்கும், கழகத்தினருக்கும் வழங்கப்பட்டது, அதை தொடர்ந்து காந்திநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் நமது தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட இளைஞரணி முன்னிலையில் இணைந்தனர், அந்நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவரையும் வரவேற்று பாராட்டுக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினர், மற்றும் 32 ஆவது வார்டு ஏல்கில் பகுதியிலும் கேக் வெட்டி இனிப்புகளை பொதுமக்களுக்கு இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது, விழா தொடர்ச்சியாக நமது கொள்கை தலைவரான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தனர், மற்றும் 11. மணி அளவில் பிங்கர் போஸ்ட் காந்தல் பகுதியில் அமைந்திருக்கும் அன்னை தெரேசாஸ் பள்ளி குழந்தைகளுக்குநோட்டு புத்தகம் கல்வி உபகரணங்கள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது, குன்னூர் நகர இளைஞர் அணி சார்பில் அண்ணா சாலை அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழக்கப்பட்டது . அதை தொடர்ந்து.சகாய மாதா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியும் கொண்டாடப்பட்டது. மற்றும் கோத்தகிரி ஒன்றியம் இளைஞரணி மற்றும் நகர இளைஞர் அணி சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,நமது கொள்கை தலைவர் திருவாளர் காமராசர், அவர்களை மரியாதை செலுத்தும் விதமாக அவர் உருவ சிலைக்கு காலை 11 மணி அளவில் மாலை அணிவிக்கப் பட்டது,பிறகு இனிப்புகள் பொதுமக்கள் அனைவருக்கும்,வழங்கி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்,பிறகு 1 மணி அளவில் கோத்தகிரி ஜான்சன் சதுக்கம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,இந்த விழாவில் நீலகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாமா ரமேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலர் தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை வெகு சிறப்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கி, பொதுமக்களோடு கேக் இனிப்பு வழங்கி வெகு சிறப்பாக அனைத்து நிகழ்ச்சியும் நடைபெறுவதற்கு நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழக இளைஞர் அணி அனைத்து ஏற்பாடுகளும் செய்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக சிறப்பித்தனர், நிகழ்ச்சி நிறைவாக இளைஞரணி சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது,