சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த அதிரடியாக அரசியலில் என்ட்ரி கொடுத்தார் தவெக தலைவர் விஜய். ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மற்றும் தவெகவின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டது. விஜய் வெளியில் தலை காட்டுவது அரிதிலும் அரிதாகிவிட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ வழக்கு விசாரணை, ஜனநாயகன் படம் வெளியிட தடை ஆகியவற்றால் விஜய் மிகுந்த நெருக்கடியில் உள்ளார்.
இதில் விஜய் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே உள்ள நிலையில் விஜய்யின் இன்றைய பேச்சில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் தவெக தொண்டர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..








