ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

 

ஜுன் ;-19தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக வெற்றி கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில்தவெக கட்சியின் தலைவர் விஜய்
ஆலங்குளத்தை சேர்ந்த தொழிலதிபருமான டிபிவிவி விபின்  சக்கரவர்த்திக்கு தென்காசி
தெற்கு மாவட்ட செயலாளராக அறிவித்த நிலையில்கட்சி தலைவர் விஜயை சந்தித்து விட்டு நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவரை வரவேற்க ஆலங்குளம் அருகே மாறாந்தையில் தொண்டர்கள் குவிந்தனர்.அங்கு அவருக்கு ஜேசிபி இயந்திரத்தின்மூலம் மலர் தூவப்பட்டது.
மேலும் ராட்சச கிரேன் மூலம் பெரிய மாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து வழிநெடுகிலும் கட்சியினர் வரவேற்றனர்.பின்பு ஆலங்குளதிற்குவந்த விபின் சக்கரவர்த்தி ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.அங்கு தொண்டர்கள் மாவட்ட செயலாளருக்கு வீரவாள் பரிசாக வழங்கினர்.
அதனையெடுத்து வள்ளி மஹாலில் வைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட இணை செயலாளர் கிரிப்சன் வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டிபிவி வைகுண்டராஜா, செயலாளர் கணேசன், பொருளாளர் கலைவாணன்,தவெக தென்காசி மாவட்ட கூடுதல் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் இசக்கிராஜ், துணை செயலாளர் தயாள், மாவட்ட பொருளாளர் இசக்கிமுத்து, மாவட்ட துணை தலைவர் வேல்சாமி, வழக்கறிஞர் நியாஸ், நிர்வாகிகள் ரமேஷ், ராஜதுரை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர்கள்,
ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.