எனது நண்பர் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – ட்ரம்ப்..!

ன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…”எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அருமையான போன்கால். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மகத்தான பணியைச் செய்து வருகிறார். நரேந்திரா: ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்களுடைய ஆதரவிற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

மோடி-ட்ரம்ப்இந்தப் போன்கால் குறித்து மோடி குறிப்பிட்டிருப்பதாவது…”எனது 75-வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பிற்கும், அன்பான உங்களது வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர் அதிபர் ட்ரம்ப்.

உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.

உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் மோடியுடன் நேரடியாக பேசியிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.