தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன.
இதனிடையே வருகின்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் விஜய் இன்று திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே மதிய நேரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க வேண்டாம் என தமிழக வெற்றி கழகம் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் பிரச்சாரத்தை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு விஜயின் பிரச்சார வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.








