தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஏர்போர்ட் வந்த அவருக்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் விஜய்க்கு அனுமதி கொடுத்த நிலையில் தற்போது விஜய் பிரச்சார வாகனத்தில் மரக்கடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் தற்போது விஜய் செல்லும் வழி எல்லாம் தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுப்பதினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் வாகனம் நகர முடியாமல் மெல்ல மெல்ல செல்கிறது. இதன் காரணமாக தற்போது பிரச்சாரம் செய்யும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது நடிகர் விஜய்க்கு போலீசார் 10.30 மணி முதல் 11 மணி வரை பேசுவதற்கு அனுமதி கொடுத்த நிலையில் அந்த நேரம் கடந்துவிட்டது. அவர் மரக்கடை பகுதிக்கு செல்ல இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் நிலையில் அவர் பிரச்சாரம் செய்யும் நேரத்தில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலும் பிரச்சார நேரம் மாறலாம். மேலும் போலீசார் அனுமதி கொடுத்த நேரம் மாறுவதினால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.