கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் நேற்று இரவு 9 மணிக்கு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் செல்வபுரம் தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த திருநங்கை சோமசுந்தரம் என்ற தனலட்சுமி (வயது 38) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக மாசிலாமணி என்பவருடன் அன்னை இந்திரா நகரில் வசித்து வந்தார். அடிககடி மும்பை சென்று விடுவாராம். தைப்பூசத்துக்கு கோவைக்கு வந்தார். அன்னை இந்திரா நகரில் மாசிலாமணி வீட்டில் தங்கி இருந்தார்.மாசிலாமணிக்கு ஒரு ” பாய் பிரண்ட் ” உள்ளார். 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் சேர்ந்து இவரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.. கொலையாளிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்..
கோவையில் அரிவாளால் வெட்டி திருநங்கை படுகொலை – 2 பேருக்கு வலைவீச்சு..!









