திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை கோடங்கிபாளையம் ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.
ஏழு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, பள்ளி சீரமைப்பு, ஆதரவற்றோர் இல்ல நிதியுதவி மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற சமூக சேவை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக மொத்தம் ₹1,27,000 மதிப்பில் சமூக பங்களிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் தினமும் கருத்தரங்குகள் நடைபெற்றன. “ஆதரவற்றவர்களை அரவணைப்போம்”, “சமூக சேவையில் இளைஞர்களின் பங்கு”, “நீர் மேலாண்மை”, “போதையில்லா தமிழ்நாடு”, “நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு”, “சாலை பாதுகாப்பு மற்றும் இரத்ததானத்தின் அவசியம்” போன்ற தலைப்புகளில் வல்லுநர்கள் மாணவர்களுக்கு பயனுள்ள விளக்க உரைகளை வழங்கினர்.
முகாம் நிறைவு விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. M. தனபால், மாணவர்கள் ஆற்றிய பணிகள் குறித்த விரிவான அறிக்கையை வாசித்தார் .
சிறப்பு விருந்தினர்கள் முகாமின் தொடக்கமும் நிறைவும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. க. காளிமுத்து M.Sc., M.Phil., B.Ed. தலைமையில், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (Private Schools) திரு. M. மணிமாறன் M.Sc., M.Phil., B.Ed. முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு மாநில முதன்மை பயிற்றுனர் மற்றும் மேனாள் ஊராட்சிமன்றத் தலைவர் முனைவர் கா.வீ. பழனிச்சாமி, முன்னாள் வார்டு உறுப்பினர் அசார் (எ) க. நடராஜன், மாவட்ட தொடர்பு அலுவலர்கள் M. கந்தசாமி, A. முருகேசன், RVS College தமிழ்த்துறைத் தலைவர் சுரேந்திரன், பள்ளி துணை முதல்வர் திருமதி குளோரி அனிதா.S, உதவி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. வசந்த்குமார் மற்றும் திரு. மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து மாணவர்களை வாழ்த்தினர்.
முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இறுதியாக, நாட்டு நலப்பணித் திட்ட மாணவனின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.