அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தனது வர்த்தக கோரிக்கைகளை முன்னெடுக்க வரி விதிப்பதை ஒரு முக்கிய காரணியாக பயன்படுத்தி வருகிறார்.
வியாழக்கிழமை கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். இதனால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் தீவுக்கான அழுத்தம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறாது.
இதற்கான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிலையில் வரி விகிதம் எப்படி இருக்கும், எந்தெந்த நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெறும் என்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கியூபாவிற்கு எதிராக பேசி வருவதுடன் அதன் தலைமைக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் கியூபா பற்றி பேசிய டிரம்ப், ‘கியூபா விரைவில் வீழ்ச்சியடையும் நிலைக்கு வரும்’ என்று தெரிவித்தார். மேலும், ஒருகாலத்தில் கியூபாவின் முக்கிய எண்ணெய் வழங்குநராக இருந்த வெனிசுலா, சமீப காலமாக கியூபாவுக்கு எண்ணெய், பணம் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் தீவு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, கியூபா மீது ஒரு ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த வாஷிங்டனுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்று கியூபாவின் அதிபர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









