இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.!!

சென்னை:
மிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

குறிப்பாக வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வெப்பத்தை தாங்க முடியாமல் திண்டாடினர். ஒரு சில இடங்களில் 2 மணி நேரத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டாலும், பல இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நீடித்து வருகிறது. இதனால், மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.