சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால்  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சாலையில் தர்ணாவில் அமர்ந்த பெண் மயங்கி விழுந்ததால்  கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், கீதாராணி தம்பதிகள் இவர்கள் அங்குள்ள லைன் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது உறவினர் கோவைகுமார் என்பவர் கடந்த வாரம் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது. மேலும் மின் இணைப்பை கொடுக்க கூடாது என மின்வாரிய ஊழியர்களையும் கோவைகுமார் மிரட்டியதால் கடந்த ஒரு வாரமாக இருளில் இருந்ததாகவும், இது குறித்து புகார் அளித்தால் ரத்தினபுரி மற்றும் சாய்பாபா காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இரண்டு மகன்களுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரேதான சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கீதாராணி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானபடுத்தி அழைத்துச் சென்று, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.