ஆட்டோவில் வைத்திருந்த பணம் பறிப்பு – 2 திருநங்கைகளுக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை போத்தனூர் அருகில் உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியை சேர்ந்த சிவகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று சரக்கு ஆட்டோவில் அங்குள்ள கஞ்சிக்கோணம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருநங்கைகள் ஆட்டோவை முந்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சாந்தியிடமும், அவரது கணவரிடமும் தகராறு செய்தனர். இந்த நிலையில் ஆட்டோவில் வைத்திருந்த பையை அவர்கள் திருடி சென்று விட்டனர். அதில் ரூ.2500 பணம் இருந்தது. இது குறித்து சாந்தி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வருகிறார்கள்.