பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி… எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை – பாகிஸ்தான் தகவல்..!

பாகிஸ்தான் ராணுவத்தால் ஒரு இந்திய விமானி கைது செய்ததாக முன்னணி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பாகிஸ்தான் உறுதியாக மறுப்பு தெரிவித்து, எந்த இந்திய விமானியும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

அல்ஜீரா என்ற தொலைக்காட்சி, ஒரு இந்திய விமானி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்திய அரசு இது முற்றிலும் பொய்யானது என தெரிவித்து மறுப்பு தெரிவித்தது.

பாகிஸ்தானும் தற்போது அதை உறுதி செய்துள்ள நிலையில், இது பொய்யான செய்தி என்பது உறுதியாகியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களாக எந்த தாக்குதலும் ஏற்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய தினத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே இந்த அமைதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், இந்திய அரசு தரப்பில் வரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே மக்கள் நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..