கோவை மே 31 தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் நவீன் அந்தோணி ராஜா ( வயது 28 )இவர் கோவையில் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 8பவுன் நகை பறித்து விட்டு தப்பிச் சென்றார் .இது குறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் நவீன் அந்தோணி ராஜாவை கைது செய்தனர் இவர் மீது பல வழிப்பறி வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார் இதன் அடிப்படையில் சுந்தராபுரம் போலீசார் நவீன் அந்தோணி ராஜா வை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.
கொள்ளையன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது .







