கோவை அருகில் உள்ள வடவள்ளி, சூப்பர் கார்டன் அவன்யூ வை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 72) இவர் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இவரது தங்கை தனது 29 பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் வீட்டை பெயிண்ட் அடித்தனர். அப்போது இவரது வீட்டில் இருந்த 29 பவுன் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து பார்வதி வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.