கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சிகரெட் விற்பனை – 2 வடமாநில வாலிபர்கள் கைது..!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் ரோடு கே.கே. நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் 2பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 260கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பெயர் நிபாஷ் பேகு ( வயது 23) நோபா டோலி (வயது 21)என்பது தெரிய வந்தது. இவர்கள் ஆவராம் பாளையம் ரோடு, கே.கே. நகர் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை சிகரெட்டில் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்