போக்சோ வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கோவை மே 28 கோவையை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38)இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .இதே போல நிஷார் (வயது 36) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இரு வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு சிறையில் உள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.