கோவையில் தனியார் நிறுவனங்களில் தங்கி வேலை செய்பவர்களை கணக்கெடுக்கபோலீஸ் கமிஷனர் உத்தரவு .

கோவை மே 17 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவைதுடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனத்தில்சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை பார்த்த வங்காளதேச வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்தும் அவர்கள் கோவையில் எந்த பகுதிக்கு எல்லாம் சென்றார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் வட மாநில வாலிபர்கள் அதிகம் பேர் தங்கி இருந்து மில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். எனவே அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் தங்கி உள்ள வட மாநில வாலிபர்கள் எத்தனை பேர் ?அதில் மேற்கு வங்காள வாலிபர்கள் எத்தனை பேர்? என்பது தொடர்பாக கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரண நடத்தி கணக்கெடுத்து வருகின்றனர் .எனவே வடமாநில வாலிபர்களை வேலைக்கு சேர்க்கும் போது கண்டிப்பாக ஆதார் கார்டு பெற்று சேர்க்க வேண்டும். அவர்களை அழைத்து வருவோர்கள் யார்? என்பதை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..