கோவிலுக்கு சென்ற வயதான தம்பதி திடீர் மாயம்..!!

கோவை ஆர்.எஸ். புரம் சுக்ரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் குருசாமி (வயது 80) இவரது மனைவி சொனாத்தாள் (வயது 76) இவர்கள் இருவரும் அங்குள்ளதன் மகன் வீட்டில் வசித்து வருகிறார்கள். அடிக்கடி கோயிலுக்கு செல்வார்கள். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி திருப்பதிக்கு மருமகள் நிர்மலாவிடம் கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது மகன் செந்தில்குமார் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.