பிரபல கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை மே 24 கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமதுரை ( வயது 31) பிரபல கொள்ளையன் .இவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகள்,ரூ. 2, லட்சத்து50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடியதாக வடவள்ளி போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர் திருட்டு -கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்தால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார் .இதை யடுத்து கொள்ளையன் சேதுராமதுரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.