மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது மின்விளக்கு கம்பம் சாய்ந்ததில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று தமிழக மத்திய பட்ஜெட் குறித்து விளக்கி பேசினார். மேலும் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்த போது திடீரென பலத்த காற்று வீச தொடங்கியது. அப்போது காற்றின் வேகத்தால் மேடை அருகே வைக்கப்பட்டிருந்த மின்விளக்கு கம்பம் ஆர்.ராசாவை நோக்கி திடிரென்று சாய்த்தது, சற்றும் எதிர்பார்க்காத அவர் உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். மின்விளக்கு கம்பம் அவர் நின்றிருந்த இடத்தில் முழுவதுமாக சாய்த்தது.
இதில் அவர் நூலிழையில் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். உடனடியாக பேச்சை நிறுத்திய ஆ.ராசா அங்கே இருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மேடை அருகே கட்டப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் சரிந்து கீழே விழாத வண்ணம் அகற்றினர்.