திருப்​பதி கலப்பட நெய் விவகாரம்..

அமராவதி: ​திருப்​பதி தேவஸ்​தான கலப்பட நெய் விவ​காரம் குறித்து நேற்று அமராவ​தி​யில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலைமை​யில் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் துணை முதல்​வர் பவன் கல்​யாண், பாஜக மாநில தலை​வர் மாதவ் மற்​றும் பல்​வேறு அமைச்​சர்​கள் பங்​கேற்​றனர்.
பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சந்​திர​பாபு நாயுடு கூறிய​தாவது: ஜெகன் ஆட்​சி​யினர் தவறு செய்​தது மட்​டுமல்​லாது, அதை மறைக்க எங்​கள் மீதே குற்​றம் சாட்​டு​கின்​றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்​தா​லும் கண்​டிப்​பாக தண்​டனையை அனுப​வித்தே ஆக வேண்​டும். இந்த விவ​காரத்​தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என எங்​களுக்கு சிபிஐ ஒரு கடிதம் மூலம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதனால் ஒரு நபர் விசா​ரணைக் குழு அமைத்து மீண்​டும் துல்லியமாக விசா​ரணை நடத்​தப்​படும். தேவைப்​பட்​டால் நீதிமன்றத்​தில் அதற்​கான அறிக்​கையை சமர்​பிப்​போம். இது இந்து மக்​களின் நம்​பிக்கை தொடர்​பான விவ​காரம். கடவுளிடம் விளை​யாடி​னால் கண்​டிப்​பாக அதற்​கான விளைவு​களை ஜெகன் ஆட்​சி​யினர் சந்​தித்தே ஆக வேண்​டும். 2022ம் ஆண்டே ஜெகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​திற்கு வரும் நெய்​யில் கலப்படம் உள்​ளது என அதி​காரி​கள் அறிக்கை கொடுத்​துள்​ளனர். அதன் மீது எந்​தவொரு நடவடிக்​கை​யும் எடுக்​காதது ஏன்? நான் ஆட்​சிக்கு வந்ததும், முதலில் கலப்பட நெய் விவ​காரத்தை கையில் எடுத்​தேன். இதில் விலங்​கு​களின் கொழுப்​பு​கள் கலந்திருப்​ப​தாக என்​டிடிபி கொடுத்த அறிக்​கையை தான் நான் வெளி​யிட்​டேன். 2019ல் ஜெகன் ஆட்​சிக்கு வந்​தது முதல் 2024ம் ஆண்டு ஜெகன் முதல்​வர் பதவி​யில் இருந்து இறங்​கும் வரை கலப்பட நெய்​தான் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு கூறி​னார்.