ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் ஒரு மாதத்தை தாண்டி விட்டது. இந்த ஒரு மாத காலத்தில் இந்த போரால் ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.ஒருபக்கம் அமெரிக்காவுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்கியதில் அங்கும் பலத்தை சேதம் ஏற்பட்டிருக்கிறது..
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். அதன்பின் அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் ஈரான் போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வது தடை பட்டிருக்கிறது.இதனால் சமையல் சிலிண்டர் கிடைக்காமல் இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம் ஹோட்டலில் விலை பட்டியலும் அதிகரித்துள்ளது. ஈரான் போர் சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், ஈரான் போர் பற்றி கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஈரான் போல் ஏற்படும் விளைவுகள் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட விளைவுகளை விட மோசமாக இருக்கும்’ என எச்சரித்துள்ளார். ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கொரோனா காலத்தை சுட்டிக்காட்டி ஈரன் போர் பற்றி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..








