பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் வழக்கில் கைதான 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் ( வயது 28 )இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோலசிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 30) இவர் கடந்த மாத 6-ந்தேதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கினார் .இது தொடர்பாக சரவணப்பட்டி போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெமிஷா ( வயது 30 )இவர் பணியில் இருந்த போது ஒரு போலீஸ்காரரை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக பெரியகடை வீதி போலீசார் ஜெமி ஷாவை கைது செய்தனர் .இந்த நிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கும் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.