ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுனரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் தீபக்குமார் மற்றும் மூர்த்தி இருவரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, லஞ்சம் தர மறுத்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இது குறித்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதோடு தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியானதால் சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் லஞ்சம் கேட்டு ஓட்டுனரை தாக்கிய வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி, இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டுள்ளனர்..
பண்ணாரி வன சோதனை சாவடியில் லஞ்சம் தர மறுத்த ஓட்டுநரை தாக்கிய வனவர், வேட்டை தடுப்பு காவலர் இருவர் சஸ்பெண்ட்..!









