ராணி எலிசபெத்தின் மறைவு… இளவரசர் சார்லஸ்-க்கு சேவை செய்து வந்தவர்கள் வாழ்வு கேளிவிக்குறி..? டஜன் கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்..!

றைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார்.

இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் கணக்கான கிளாரன்ஸ் ஹவுஸ் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ள சார்லஸ் மற்றும் சார்லஸின் மனைவியின் அலுவலகங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த முக்கிய நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் அரச குடும்பத்திற்கு  பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவருக்கு சேவை செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிட்டதட்ட 100 தனியார் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பணி நீக்க அறிவிப்பினை பெற்றவர்களில் தனியார் செயலாளர்கள், நிதி அலுவலகம், தகவல் தொடர்பு குழு, வீட்டு ஊழியர்கள் என பலரும் அடங்குவர். இதனால் பல ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் வளர்ச்சியுடன் தொடர்புடையவர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள் அல்லது இணைக்கப்படுவார்கள். வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையில் அரசு எதையும் விவரிக்கும் சூழ்நிலையில் அரசும் இல்லை. மேலும் அரசரின் உயர்மட்ட குழுவில் சிலருக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆக அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் தொடர்ந்து புதிய மன்னருக்கு சேவை செய்வார்கள். மொத்தத்தில் 70 ஆண்டுகளாக அரியனையை அலங்கரித்து வந்த ராணியின் மறைவு என்பது, பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், பலரின் வாழ்வாதாரமும் இதனால் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் இது குறித்தான முழு தகவல்கள் இங்கிலாந்தில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே தெரியவரும்.