அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்;- அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ஜூலை 11ம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.
கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையேயான உரசல், சாதி ரீதியிலான பிரச்சனையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி மனு அனுப்பியும், பதிலும் இல்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28 ஆம் தேதி மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று பி. ஏ. ஜோசப் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Leave a Reply