முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய தம்பதிகள் கொலை சம்பவம் மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்று இன்று வரை தீர்வு காணவில்லை.

முதல்வர் அதிமுக, பாஜக கூட்டணியை சொல்லிக் கொண்டிருக்கிறார். நேற்று நடந்த பாராட்டு விழாவிலும் அதே தான் சொல்லி இருக்கிறார். மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள் திருநெல்வேலியில் குடிக்க தண்ணீர் இல்லை 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை இதையெல்லாம் முதல் அமைச்சர் அக்கறையோடு பார்க்காமல் தேர்தல் கூட்டணியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் அவருக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்து விட்டது.

மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு புதிய தமிழகம் மற்றும் பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டமன்றத்தில் நிறைய சர்ச்சைகள் வந்து கொண்டு இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு முன்பு எடுத்ததை நிறுத்தி வைத்திருந்தார்கள். வடமாநிலங்களில் இரண்டு மூன்று மாநிலங்களில் எடுத்த முறை சரியில்லை என நீதிமன்றத்திற்கு சென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை எடுத்து கூறும் வகையில் மத்திய அரசு செய்யுமா? மாநில அரசு செய்யுமா? என்பதை ஒரு முடிவு எடுத்து மத்திய அரசு செய்து வருகிறது என்றார்.