அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தின் கமங் பகுதியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு கடந்த 6-ம் தேதி ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவம் 7 வீரர்களை சடலமாக மீட்டது.
மீட்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் அசாமின் திஸ்பூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வீரர்களின் உடலுக்கு கஜராஜ் படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரவின் கோஸ்லா உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆதி மாநிலங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு வீரர்களின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவலை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Leave a Reply