கலைஞர் போட்ட பிச்சை… அண்ணாமலை கண்டனம்… பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு..!

யர்நீதிமன்றம் அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என பேசிய பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம்..

ஐகோர்ட் அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ காட்சியுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை, தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உயர்நீதிமன்றம் அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என பேசியதற்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்துள்ளார். உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தையை வெளிப்படுத்திவிட்டேன் என வருத்தம் கூறியதாக கூறப்படுகிறது..