அப்பார்ட்மெண்ட் செயலாளருக்கு பீர் பாட்டில் குத்து

கோவை பீளமேடு வி. கே. ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்ட் உள்ளது இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பசார்லஸ் என்பவர் ராம்குமார் என்பவருடன் புதிதாக குடி வந்தார்.இவர் தனக்கு சொந்தமான காரை பார்வையாளர்கள் கார் நிறுத்தும் இடத்தில் தொடர்ந்து நிறுத்தி வந்தாராம்.இதை அந்த அப்பார்ட்மெண்ட் செயலாளர் சுந்தர்ராசு (வயது 42) கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சார்லஸ் பீர் பாட்டிலால் செயலாளர் சுந்தர்ராசை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது  . இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் சார்லஸ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..