சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…

சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த மதன் என்பவரை பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் பாலியல் குற்றவாளி என உறுதி செய்து மேற்படி நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் படி போக்சோ வழக்கு குற்றவாளியான மதன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 15 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.