அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 42ம் ஆண்டு வசந்த பஞ்சமி விழா..!

கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் அணியினர் சீர்வரிசை எடுத்து வருதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. பின்பு அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது . இந்த அன்னதானத்தை முன்னாள் நகர் மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன்,நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழா ஏற்பாடுகளை விழா கமிட்டிகள், ஸ்ரீ மாரியம்மன் நற்பணி மன்றம், எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் பொதுமக்களும் செய்திருந்த நிலையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..