10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்…

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.