பர்கினோ பாசோவில் பயங்கரம்: தங்க சுரங்கத்தில் கோர வெடி விபத்து- 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.!!

பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர்.

பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி நடந்திருக்கிறது.

அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 55 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சுரங்கத்தில் அதிகமான வெடிபொருள்கள் இருந்தது தான் விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.