அரும்பாக்கத்தை குலை நடுங்க செய்த பயங்கர ரவுடிகள் – துப்பாக்கி முனையில் கைது..!

பணத்திற்காக ஆட்களை கடத்துவது பயங்கரமான சமூக விரோத செயலில் ஈடுபடுவது சென்னை மாநகரில் இருக்கவே கூடாது அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என கடுமையான உத்தரவை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தூர் கூடுதல் ஆணையர் முரட்டு நாயகன் அஸ்ரா கர்க் ஆகியோரின் கடுமையான உத்தரவின் பேரில் அரும்பாக்கம் பகுதியை குலையை நடுங்க செய்த பயங்கர ரவுடிகள் கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ஏரியாவை கலங்கடித்து வந்தனர். அரும்பாக்கம் ரவுடி சுரேஷ் பட்டாபிராம் ரவுடி சங்கர் ஆகியோர் ஏரியாவை கலக்கி வந்தனர் . அவர்களது ரவுடி சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரும்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க மு யலும் போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பி ஓடினர்.தப்பி ஓடிய ரவுடிகளை பெரியபாளையம் வரை தப்பி ஓடினர் .ரவுடிகளை சேஸ் செய்த போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் போலீஸ் படையினர் 9 எம் எம் பிஸ்டல் மூலம் மடக்கிப்பிடித்து தப்பி ஓடினால் சல்லடையாக உடல் எங்கும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சிதறி செத்துப் போய் விடுவீர்கள் என மிரட்டியே நைலான் கயிறு மூலம் கட்டி அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து பயங்கரமான நாட்டு வெடிகுண்டுகள் கத்திகளை பறிமுதல் செய்தனர். பயங்கரமான ரவுடிகள் போலீஸ் உதவி ஆணையர் ரமேசை பார்த்ததும் பிடிபட்ட இடத்திலேயே மூத்திரம் பெய்துள்ளனர் போலீசார் அவர்களை காவல் நிலையத்தில் எந்தெந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என விசாரித்து வருகின்றனர். காவல் நிலையத்தில் குற்றவாளிகள் இருப்பதை தெரிந்துகொண்ட ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்..