தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை….

ரூ 133 கோடியே 21 லட்சம் செலவில் அமைக்கப்படும் செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.கோவை டிச 17தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (திங்கள்கிழமை) காலை 9-20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வருகிறார் .விமான நிலையத்தில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாபெரும் வரவேற்பு அளிக்கபடுகிறது.. பின்னர் காரில் கோவை நவ இந்தியா பகுதியில் எஸ். என். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள எஸ். என். ஆர். அரங்கில் நடைபெறவுள்ள “மக்களுடன் முதல்வர்” புதியதிட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.தொடர்ந்து மனு வாங்கப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை மக்களுக்கு வழங்குகிறார்.பின்னர்,அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு காலை 10 மணிக்கு கோவை டாக்டர்.நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழிப்பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரூ 133 கேட்டியே 21 லட்சம்செலவில் அமைக்கப்படும் செம்மொழிப் பூங்கா” பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிபேசுகிறார்..செம்மொழி பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பகுதியில் பிரம்மாண்டமான மேடை, பந்தல், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் பொது மக்களுக்கு தேவையான கழிப்பறை குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன முதலமைச்சர் வருகையையொட்டி கோவை அவிநாசி ரோடு நவஇந்தியா பகுதி காந்திபுரம் சாலைகளில் தூய்மை பணிகள் நடந்து வருகிறது..மாலை 2 -10 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.முதல அமைச்சர் வருகையை யொட்டி கோவைவிமான நிலையத்திலிருந்து செம்மொழிப் பூங்காஅடிக்கல் நாட்டு விழா நடைபெறும் மைதானம் வரை ரோட்டில் இருபுறத்திலும்,தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.மாலை 3 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை ஒட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்..கோவை ,நீலகிரி, திருப்பூர், , மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்குவரவழைக்கப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் நேற்று முதல் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.